வாஞ்சிநாதன் நினைவு தினம்
வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர் உயிரிழந்த வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு கோவில்பட்டி துணை கலெக்டர் சங்கரநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஓட்டப்பிடாரம் தாசில்தார் முத்து, வருவாய் ஆய்வாளர் சொக்கலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் அழகுமலை மற்றும் ெரயில்வே ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கொல்லங்கிணறு பஞ்சாயத்து தலைவர் லதா முருகன், தென்மண்டல அந்தணர் முன்னேற்ற கழக தலைவர் விஸ்வநாதன், இந்து முன்னணி கிளை தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் வாஞ்சிநாதன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவுதினம், இந்திய கலாசார நட்புறவு கழகம் சார்பில், கோவில்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கி, வாஞ்சிநாதன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நல்வாழ்வு இயக்கத்தலைவர் செண்பகம், அனைத்து ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், ரத்ததான கழக பொறுப்பாளர் சரமாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story