பந்தலூர் பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி
பந்தலூர் பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே பத்தாம் நம்பர் ஆதிவாசி காலனியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
இதேபோல் அய்யன்கொல்லி அருகே உள்ள முருக்கம்பாடி, கருத்தாடு, புஞ்சைகொல்லி உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், டாக்டர் அன்பரசு ஜெரால்டு, சுகாதார ஆய்வாளர் மோகன்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story