மடத்துக்குளத்தில்உழவர் சந்தை அமைய உள்ள நிலையில் இடம் தேர்வு செய்வதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


மடத்துக்குளத்தில்உழவர் சந்தை அமைய உள்ள நிலையில் இடம் தேர்வு செய்வதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
x
தினத்தந்தி 17 Jun 2021 10:34 PM IST (Updated: 17 Jun 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளத்தில்உழவர் சந்தை அமைய உள்ள நிலையில் இடம் தேர்வு செய்வதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

போடிப்பட்டி
மடத்துக்குளத்தில்உழவர் சந்தை அமைய உள்ள நிலையில் இடம் தேர்வு செய்வதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நேரடி விற்பனை
விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் இல்லாமல் தாங்களே விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 1999 ம் ஆண்டு உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது. சண்டிகரில் அப்னே மண்டி என்ற பெயரில் விவசாயிகள் நேரடி விற்பனை முறையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உழவர் சந்தைகள் 'விளைய வைப்பதும் உழவரே, விலையை வைப்பதும் உழவரே' என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுவருகிறது.
முதல் உழவர் சந்தைமதுரையில் தொடங்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது 157 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடுதலாக 120 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பேரூராட்சிப் பகுதிகளில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இந்த உழவர் சந்தைகள் 15 முதல் 20 சென்ட் இடத்தில் அமைய உள்ளது. இங்கு 20 முதல் 25 கடைகள் மட்டுமே கட்டப்படும். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், அவினாசி, தளி, வெள்ளகோவில் பகுதிகளில் உழவர் சந்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
தற்போது மடத்துக்குளம் பகுதியில் உழவர் சந்தைக்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேரூராட்சி அலுவலகத்துக்குப் பின்புறம் தற்போது வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. அதனை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு அந்த இடத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 
மேலும் வேடப்பட்டி சாலையிலுள்ள இடம், மடத்துக்குளம் நால்ரோடு பக்கத்திலுள்ள காலி இடம் ஆகியவற்றில் உழவர் சந்தை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து நேற்று கோவை வேளாண்மைத் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தர வடிவேலு ஆய்வு மேற்கொண்டார். 
இந்த ஆய்வின்போது வேளாண் அலுவலர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) பிரவீணா, உதவி வேளாண் அலுவலர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.மடத்துக்குளம்பகுதியில் உழவர் சந்தை அமைய இருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Next Story