நீலகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி


நீலகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 17 Jun 2021 10:34 PM IST (Updated: 17 Jun 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 200-க்கு கீழ் வந்தது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 662 ஆக உயர்ந்து உள்ளது. 

மேலும்  489 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 23 ஆயிரத்து 821 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதற்கிடையில் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவுக்கு 141 பேர் இறந்துள்ளனர்.

 தற்போது 2,700 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில் மொத்தம் உள்ள 341 ஆக்சிஜன் படுக்கைகளில், 257 படுக்கைகள் நிரம்பி உள்ளது. மீதமுள்ள 84 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

Next Story