வெள்ளகோவிலில் கொரோனா தடுப்பூசி போட திரண்ட பொதுமக்கள்


வெள்ளகோவிலில் கொரோனா தடுப்பூசி போட  திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jun 2021 10:45 PM IST (Updated: 17 Jun 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் கொரோனா தடுப்பூசி போட திரண்ட பொதுமக்கள்

வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நேற்று 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மருந்து குறைந்த அளவே இருந்ததால் அதிகப்படியான பொதுமக்கள் ஊசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். அதேபோல் வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், வங்கி, ஊராட்சி, நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பஸ் டிரைவர், கண்டக்டருக்கு தடுப்பூசி போட்டனர்.

Next Story