ேபரிக்காய் விலை வீழ்ச்சி
கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலை அடுத்த பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பேரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பேரிக்காய்களை பொறுத்தவரை வால்பேரி, சர்க்கரைபேரி, முள்பேரி, ஊட்டி பேரி உள்பட பல்வேறு ரகங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரம் முதல் அக்டோபர் மாத இறுதிவரை பேரிக்காய் சீசன் இருக்கும்.
இங்கு விளையும் பேரிக்காய்கள், கேரள மாநிலத்துக்கு அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும் பேரிக்காய்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கொடைக்கானல் பகுதியில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், போதிய விளைச்சல் இல்லை. மேலும் கட்டுப்படியான விலையும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
கொரோனா ஊரடங்கு எதிரொலியாக, பேரிக்காய்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேரிக்காய்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story