முத்தூர், நத்தக்காடையூர் பகுதியில் 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முத்தூர், நத்தக்காடையூர் பகுதியில் 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முத்தூர்
முத்தூர், நத்தக்காடையூர் பகுதியில் 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பிரசாத்தாமரைக்கண்ணன்,மார்கினி, வினோதினி, நவீனா தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். இதன்படி நேற்று ஒரே நாளில் மொத்தம் 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் பழையகோட்டை, மருதுறை ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று நடைபெற்றது. இதன்படி பழையகோட்டைப்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி, மருதுறை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் அரசு ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள் சவுமியா, கோமதிசரண்யா, நிவேதா, கார்த்திகேயன்,லட்சுமிபிரியா தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போட்டனர். இதன்படி நேற்று ஒரே நாளில் 2ஊராட்சி களிலும் 170 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
420 பேருக்கு...
முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் 420 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் தேவராஜன், கார்த்திகேயன் மற்றும் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story