பைனான்சியர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
சாத்தான்குளத்தில் பைனான்சியர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் மார்ட்டின் (வயது 45). பைனான்சியரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் மீரான் (33) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு மார்ட்டின் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது.
இதுதொடர்பாக, பாபு சுல்தான், புஹாரி, ரஸ்ருதியின், பாரீஸ், ஜிந்தா, அப்துல் சமது ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சாத்தான்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த மைதீன் மீரான் (30), சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்த பாபு சுல்தான் மகன் முகமது பிலால் (21) ஆகிய மேலும் 2 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story