கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 17 Jun 2021 11:28 PM IST (Updated: 17 Jun 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

திருப்புவனம், 
திருப்புவனத்தில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மானாமதுரை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அ.முத்துஇசக்கி தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் திருப்புவனம் வக்கீல் சங்க தலைவர் சேதுராமச்சந்திரன் மற்றும் வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சேதுராமு தலைமையில் நடைபெற்றது. முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா கலந்துகொண்டார். ஏற்பாடுகளை மானாமதுரை வட்ட சட்டப்பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.

Next Story