நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 41,417 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41,417 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 19 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,087 ஆக அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,417 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று 526 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 37 ஆயிரத்து 907 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 365 பேர் இறந்து விட்ட நிலையில், 3,145 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், பொதுமக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story