வெண்ணந்தூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது


வெண்ணந்தூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 11:33 PM IST (Updated: 17 Jun 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த 17 வயது மாணவி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவி பெற்றோர் வீட்டில் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது மகளை காணவில்லை என மாணவியின் பெற்றோர் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமையன்பட்டியை சேர்ந்த சரவணன் மகன் டிரைவர் அரவிந்த் (வயது 25) என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. 

அரவிந்துக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து அரவிந்தின் உறவினர்கள் வீட்டில் இருந்த மாணவியை வெண்ணந்தூர் போலீசார் மீட்டு வந்தனர். மேலும் ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்ற அரவிந்த் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story