ஆரணியில் விதிமுறைகளை மீறிய 4 ஜவுளி கடைகளுக்கு ‘சீல்’
ஆரணியில் விதிமுறைகளை மீறிய 4 ஜவுளி கடைகளுக்கு ‘சீல்’
ஆரணி
உலகம் முழுவதும் கொரோனா காலத்தையொட்டி அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை கடைகள், பேக்கரி, டீ கடை, ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகள் திறந்து கொள்ள அரசு தளர்வு செய்துள்ளது. ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் நகராட்சி, வருவாய்த்துறை, காவல் துறை இணைந்து ஆரணியில் மண்டி வீதி, வ.உ.சி. தெரு, காந்தி ரோடு, முனுசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறந்திருந்த 4 ஜவுளி கடைகளை மூடி ‘சீல்’ வைத்தனர்.
அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story