தாய் கொரோனாவுக்கு பலியானதால் துபாயில் ஆதரவின்றி தவித்த 11 மாத குழந்தை; விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டு தந்தையிடம் ஒப்படைப்பு
தாய் கொரோனாவுக்கு பலியானதால் துபாயில் ஆதரவின்றி தவித்த 11 மாத குழந்தை விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
செம்பட்டு,
தாய் கொரோனாவுக்கு பலியானதால் துபாயில் ஆதரவின்றி தவித்த 11 மாத குழந்தை விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
துபாயில் வீட்டு வேலை
கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவை சேர்ந்தவர் வேலவன்(வயது 38) இவரது மனைவி பாரதி (38). இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் இறந்துவிட்டான். 2-வது மகனுக்கு 7 வயது ஆகிறது. 3-வது மகன் தேவேஷ் பிறந்து 11 மாதங்கள் ஆகிறது. குடும்ப வறுமை காரணமாக பாரதி பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து வந்தார். அப்போது அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளார். இந்தநிைலயில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து வேலைக்காக 3-வது மகன் தேவேசை 9 மாத கைக்குழந்ைதயாக தூக்கிக்கொண்டு துபாய்க்கு வேலைக்கு சென்றார்.
கொரோனாவுக்கு பலி
அங்கு வீட்டு வேலை செய்து வந்த பாரதி, திடீரென கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 29-ந்தேதி பாரதி உயிரிழந்தார். அவருடைய உடல் துபாயில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனால் அவருடைய கைக்குழந்தை தேவேஷ் ஆதரவின்றி தவித்தது. பாரதியின் தோழிகள் அவரை பராமரித்து வந்தனர். இதுபற்றி அறிந்த துபாயில் வசிக்கும் துபாய் தி.மு.க. அமைப்பாளர் எஸ்.எஸ்.முகமது மீரான், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை தெரிவித்தார்.
விமானத்தில் திருச்சிக்கு வந்தது
இதைத்தொடா்ந்து அந்த குழந்தையை தமிழகத்துக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டார். பின்னர், நேற்று துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த திருவாரூரை சேர்ந்த சதீஷ்குமாருடன் குழந்தை தேவேஷ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விமானம் நேற்று மாைல திருச்சி விமான நிலையத்தை அடைந்ததும், விமான நிலையத்தில் காத்திருந்த குழந்தையின் தந்ைத வேலனிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தாயை இழந்து தவித்த குழந்தை தந்தையிடம் கொஞ்சி விளையாடியது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. குழந்ைதயின் தந்ைத தமிழக முதல்-அமைச்சருக்கும், துபாய் தி.மு.க. நிர்வாகிக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தாா்.
Related Tags :
Next Story