ஆடு திருடிய 3 பேர் கைது


ஆடு திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 12:00 AM IST (Updated: 18 Jun 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். சம்பவத்தன்று இரவு இவருக்கு சொந்தமான 3 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.  இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, வினோத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆடுகளை திருடியது  கரடிசித்தூர் கிராமத்தை சார்ந்த ராகுல் (வயது 21), விக்ரம் (21 ) மற்றும் 18 வயதுடைய இளைஞர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 ஆடுகளை பறிமுதல் செய்தனர். 

Next Story