டாஸ்மாக் திறப்பை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் திறப்பை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2021 12:03 AM IST (Updated: 18 Jun 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் திறப்பை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து நேற்று கரூர் மாவட்ட பட்டாளி மக்கள் கட்சி சார்பில் நிர்வாகிகளின் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தாந்தோணிமலை என்.ஜி.ஓ. நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Next Story