மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 12:11 AM IST (Updated: 18 Jun 2021 12:11 AM IST)
t-max-icont-min-icon

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

கிருஷ்ணராயபுரம்
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர்  திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு கடந்த 14-ந்தேதி அதிகாலை வரத்தொடங்கியது. அன்று கதவணைக்கு வினாடிக்கு 4000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டது. பின்னர் 15-ந்தேதி அன்று கதவணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இப்படியாக இந்த கதவணக்கு தண்ணீர் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து இந்த தண்ணீரை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணை கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Next Story