வால்பாறையில் டீக்கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறையில் டீக்கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
வால்பாறை
வால்பாறையில் டீக்கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
காட்டு யானைகள்
வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் குறைந்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக வால்பாறை அருகே உள்ள அப்பர் பாரளை, பாறைமேடு, புதுத்தோட்டம் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 3 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த நிலையில் எஸ்டேட் பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானைகள் வரட்டுப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர் கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வனச்சோலையில் முகாமிட்டது.
டீக்கடையை உடைத்து அட்டகாசம்
பின்னர் அந்த யானைகள் நள்ளிரவில் வால்பாறை-சோலையார் அணை செல்லும் சாலை ஓரத்தில் இருந்த நசீர் என்பவரின் டீக்கடையை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
பின்னர் அந்த கடைக்குள் இருந்த தின்பண்டங்களை எடுத்து சாப்பிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையின் அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு நின்றிருந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
ஆனால் அவை அங்கு செல்லாமல் குடியிருப்புக்குள் நுழைய முயன்றன.
தொடர்ந்து கண்காணிப்பு
இருந்தபோதிலும் வனத்துறையினர் தொடர்ந்து ஒலி எழுப்பி அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தினார்கள். தற்போது அந்த யானை கூட்டம் வரட்டுப்பாறை வனப்பகுதிக்குள் முகாமிட்டு உள்ளது.
எனவே இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொது மக்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அத்துடன் வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story