பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் பில்லூர் அணை யில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரையோர மக்களை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் பில்லூர் அணை யில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரையோர மக்களை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பில்லூர் அணை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் தேக்க பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.
அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி. காலை அணைக்கு வினாடிக்கு 3160 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 86.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் நீர்மட்டம் உயரம் 92 அடியாக உயர்ந்தது. இரவு முழுவதும் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதிகாலை 3 மணிக்கு அணையின் நீர்மட்ட உயரம் 97 அடி யாக உயர்ந்தது. -
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் மின் சார உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கப்பட்டன.
இதில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் அணையின் 4 மதகு கள் திறந்ததால் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி என அணையில் இருந்து வினாடிக்கு மொத்தம் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் பகல் 12 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு தொடர்ந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணை நீர்மட்டம் உயரம் 97 அடியாக இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் உயரத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றின் இருபுறமும் கரைகளை தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற் காக மேட்டுப்பாளையம் வந்தார்.
அவர், பவானி ஆற்றுப் பாலம் மற்றும் கரையோர பகுதிகளுக்கு சென்று வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார்.
பின்னர், அவர் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து தாசில்தார் ஷர்மிளாவிடம் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story