பொள்ளாச்சியில் இருந்து தமிழக எல்லை பகுதிக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள்
கேரளாவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், பொள்ளாச்சி யில் இருந்து தமிழக எல்லைக்கு மதுபிரியர்கள் படையெடுத்து வருகிறார்கள். அவர்கள் போலீசார் கெடுபிடியால் குறுக்கு பாதைகளை பயன்படுத்தி சென்றனர்.
பொள்ளாச்சி
கேரளாவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், பொள்ளாச்சி யில் இருந்து தமிழக எல்லைக்கு மதுபிரியர்கள் படையெடுத்து வருகிறார்கள். அவர்கள் போலீசார் கெடுபிடியால் குறுக்கு பாதைகளை பயன்படுத்தி சென்றனர்.
கேரளாவில் மதுக்கடைகள் திறப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இருமாநிலங்களிலும் மதுக்கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்கள் தவிர திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இதனால் கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப் பட்டன.
இதனால் தமிழக-கேரள எல்லைப்பகுதியை ஒட்டி கேரளாவில் இருக்கும் மதுக்கடைகள் அனைத்தும் திறந்தது.
ஒரு கி.மீ. தூரம் வரிசை
இதன் காரணமாக பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதி களை சேர்ந்த மதுபான பிரியர்கள் எல்லையில் உள்ள கோபால புரத்தில் இருக்கும் மதுக்கடைக்கு முன்பு குவிந்தனர்.
இங்கு கேரளா பகுதியை சேர்ந்தவர்களை விட தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் காணப்பட்டனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். முகக்கவசம் அணிந்து சென்ற நபர்களுக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் முகக்கவசம் விற்பனையும் சூடுபிடித்தது.
சோதனை சாவடியில் கண்காணிப்பு
இதற்கிடையில் திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வரிசையில் நின்றனர். ஒவ்வொருவருக்கும் 2 லிட்டர் அளவு கொண்ட மதுபாட்டில்கள் மட்டும் வழங்கப்பட்டன.
இதனால் நண்பர்களை அழைத்து வந்து கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி, பையில் போட்டு சென்றனர். இது ஒருபுறம் இருக்க கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழக எல்லையான கோபாலபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குறுக்குப்பாதை
போலீசார் கெடிபிடி அதிகமாக இருந்ததால் மதுபிரியர்கள் செடி முத்தூர், நெடும்பாறை, வடக்குகாடு, செமனாம்பதி உள்ளிட்ட பகுதி களில் உள்ள குறுக்குபாதைகளை கேரளாவுக்கு செல்ல பயன்படுத்தி னார்கள்.
இதுகுறித்து மதுபிரியர்கள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்காததால் 128 கி.மீ. தூரம் திண்டுக்கல்லுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் தற்போது கேரளாவில் மதுக்கடை கள் திறந்துவிட்டதால், இங்கிருந்து 15 கி.மீ. தூரம் சென்றால் போதும். ஆனால் எல்லையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் கெடுபிடி செய்வதால் குறுக்குப்பாதையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
கொரோனா பரவும் அபாயம்
கொரோனா பரவல் குறையாத நிலையில் மதுபாட்டில்கள் வாங்க வேண்டும் என்ற ஆவலில் வரிசையில் நெருக்கமாக காத்து நிற்கிறார் கள். இதனால் சமூக இடைவெளி என்பது இல்லாமல் போய்விடுகிறது.
எனவே அங்கு சென்று வருபவர்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story