குற்றாலம் கோவிலில் விநாயகர் சிலை திருட்டு
குற்றாலம் கோவிலில் விநாயகர் சிலை திருட்டு போனது.
தென்காசி:
குற்றாலம் தேரடி வீதியில் சிற்றருவி செல்லும் பாதையில் குற்றால நாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அர்ச்சகர் பிச்சுமணி பூஜையை முடித்து சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் கோவிலில் பார்த்தபோது அங்கு இருந்த விநாயகர் சிலையை காணவில்லை. இதுகுறித்து அவர்கள் கோவில் ஊழியர்களுக்கு தகவல் கூறினார்கள். ஊழியர்கள் அங்கு வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த விநாயகர் சிலையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து குற்றாலம் போலீசில் குற்றாலநாதர் சுவாமி கோவில் துணை ஆணையர் கண்ணதாசன் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story