கடையம் அருகே மதுபோதையில் பயங்கரம்: சமையல் தொழிலாளியை அடித்துக்கொன்ற மகன்


கடையம் அருகே மதுபோதையில் பயங்கரம்:  சமையல் தொழிலாளியை அடித்துக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 18 Jun 2021 1:14 AM IST (Updated: 18 Jun 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மதுபோதையில் சமையல் தொழிலாளியை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கடையம்:
கடையம் அருகே மதுபோதையில் சமையல் தொழிலாளியை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

சமையல் தொழிலாளி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 60), சமையல் தொழிலாளி. இவருக்கு ஜெயசீலன், பிரேசன் (28) ஆகிய மகன்களும், பிரேசி என்ற மகளும் உள்ளனர். 
இதில் பிரேசன் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் பிரேசன் மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, அவர் தனது தந்தை தனபாலிடம் திடீரென்று தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பிரேசன் அருகில் கிடந்த கட்டையால் தந்தை என்றும் பாராமல் தனபாலை அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

அப்போது, கீேழ கிடந்த பாத்திரமும் தனபால் தலையில் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மகன் கைது

இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தனபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். 

இந்த கொலை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையம் அருகே மதுபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story