கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பேட்டி
நியாயமான கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக கவிதா ராமு நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், சமூக மாமேதை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த சிறப்பு வாய்ந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள் தெரிவிக்கும் நியாயமான கோரிக்கைகள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் தேவைகள் என்னென்ன என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவேன். முக்கியமாக சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மை, மகளிர் மேம்பாடு, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story