கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி


கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 Jun 2021 2:14 AM IST (Updated: 18 Jun 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இறந்தனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் திருப்பெயரை சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவரும், புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 118 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 532 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று மட்டும் 2,051 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டத. இதுவரை மொத்தம் 74,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 20 கோவிஷீல்டு தடுப்பூசியும், 290 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.

Next Story