மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி + "||" + Electricity kills teenager

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 21). இவரது தோட்டத்திற்கு அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. அதில் திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.அதனை சரி செய்வதற்காக மின் இணைப்பை துண்டிக்காமல், மின்மாற்றியின் மீது நவநீதகிருஷ்ணன் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியின் மீது நவநீதகிருஷ்ணன் மோதியதில், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், நவநீதகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
2. மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
3. மின்சாரம் நிறுத்தம்
மின்சாரம் நிறுத்தம்
4. துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி
வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
5. மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு
மதுரையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்