தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது


தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது
x
தினத்தந்தி 18 Jun 2021 2:20 AM IST (Updated: 18 Jun 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையிலும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு  மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 450 என்றிருந்த கொரோனா தொற்று தற்போது 69 ஆக குறைந்துள்ளது. விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றில்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 28-ம் தேதி 3.13 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ஒரு லட்சத்து 523 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்-அமைச்சர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. 62 ஆயிரம் கொரோனா தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன. 70 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.  இதனால் கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் தனி சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட 28 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் உள்ளதுடன் இவற்றிற்கு 13 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டு உரிய வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.




Next Story