மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2021 4:08 AM IST (Updated: 18 Jun 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகளை மூடக்கோரி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.கவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:
மதுக்கடைகளை மூடக்கோரி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.கவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும் பா.ம.க. சார்பில் நேற்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி மேட்டூர் ஜீவா நகரில் முன்னாள் பேரூராட்சி தலைவர் தமிழ்வாணன் வீட்டின் முன்பு சதாசிவம் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோன்று பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் குஞ்சாண்டியூரில், அவருடைய வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் கருப்புக்கொடியை ஏந்தி, கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
வீரபாண்டி
ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி மேட்டுக்கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வீரபாண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் என்கிற சண்முகம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீரபாண்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் பைரோஜி, அக்கரை பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பா.ம.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி, வீரபாண்டி தெற்கு ஒன்றிய தலைவர் பாலம் பட்டி காவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேவூர்
தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தியில் ஓமலூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தாரமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி பாபு, பா.ம.க. மாநில துணை அமைப்பு செயலாளர் பாபு என்கிற பச்சியண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தேவூர் பேரூராட்சி பகுதிகளில் நடந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் தெற்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் சங்க துணை செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். அரசிராமணி பேரூராட்சி அமைப்பு செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில் தேவூர் பேரூராட்சி பொருளாளர் வெண்ணிலா தாசசேகர், சுப்பிரமணி, முனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பா.ம.க.வினரின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
ஓமலூர்
சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் கிராமம் மட்டம்பட்டி மேட்டுகாடு பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் சத்திரியசாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்ககிரிஒன்றிய பொறுப்பாளர் வடிவேல், துணைச்செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓமலூர் தெற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் சிக்கம்பட்டி, எம்.செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் செல்வி ராமசாமி முன்னிலை வகித்தார். மேலும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி அய்யனார் மற்றும் நிர்வாகிகள் சிவபிரகாசம், சவுண்டப்பன், வக்கீல் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். 
மேச்சேரி அருகே உள்ள நங்கவள்ளியில் தெற்கு மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆர்்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் அப்பு நாடார், மாவட்ட துணைத்தலைவர் வடிவேல்,  ஒன்றிய செயலாளர் கோபிநாத், நங்கவள்ளி பேரூர் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி
சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எடப்பாடி வீரப்பம்பாளையத்தில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கொழந்தாகவுண்டர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பூரண மதுவிலக்கு வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே போல கொளத்தூர் கருங்கல்லூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மாரப்பன் தலைமையில் பா.ம.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story