வெள்ளக்கல்பட்டி, ஏற்காடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வெள்ளக்கல்பட்டி, ஏற்காடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Jun 2021 4:11 AM IST (Updated: 18 Jun 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளக்கல்பட்டி, ஏற்காடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சேலம்: 
கருப்பூர் துணை மின் நிலையத்தின் என்ஜினீயர் கல்லூரி மின்பாதையிலும் மல்லூர் துணை மின் நிலையத்தில் அலவாய்பட்டி மின்பாதையிலும், அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஏற்காடு மின்பாதையிலும்  நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
பாரதி நகர், வெள்ளக்கல்பட்டி, கரும்பாலை, பாகல்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, கோட்டகவுண்டம்பட்டி, சாமிநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, புளியம்பட்டி, பெருமாள்கோவில், மாங்குப்பை  மற்றும் பொன்பாரப்பட்டி, அனந்தக்கவுண்டப்பளையம், வெண்ணந்தூர், அலவாய்பட்டி, நரிக்கல் கரடு, வெள்ளைப்பிள்ளையார் கோவில், கீரனூர் மற்றும் செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, கோம்பைபட்டி, குருவம்பட்டி, குன்றத்து மேடு, மாந்தோப்பு கருங்காளி, ஏற்காடு.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் தமிழ்மணி, சங்கர சுப்ரமணியன், குணவர்த்தினி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Next Story