மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு கடும் கண்டனம்
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சசிகலாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சசிகலாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் தலைைம தாங்கினார்.
மாநகர் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வி.பன்னீர்செல்வம், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட முடிவில் கொண்டலாம்பட்டி பகுதி-1 செயலாளர் எம்.சண்முகம் நன்றி கூறினார். இதில் கட்சியின் மாநகர், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
சசிகலாவுக்கு கடும் கண்டனம்
கூட்டத்தில் சசிகலாவை கண்டிப்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* சசிகலா அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. சசிகலா தொலைபேசியில் சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது, ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்து வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அ.தி.மு.க.விற்கும், சசிகலாவிற்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். சசிகலாவிடம் தொலைபேசியில் பேசிய அனைவரையும் அ.தி.மு.க.வில் இருந்து உடனடியாக நீக்கியதை சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறோம்.
* தமிழக சட்டசபை பொதுத்தேர்தலின் போது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க வெற்றிக்கு பாடுபட்ட கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சியினருக்கும், 234 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
10 தொகுதிகளில் வெற்றி
*சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் வெற்றிக்கு பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கும், சேலம் வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
* அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஒரு மனதாக தேர்ந்தெடுத்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சேலம் மாநகர் மாவட்ட கழகம் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறது. இதேபோல், அ.தி.மு.க. சட்டமன்ற குழுவிற்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.
நடவடிக்கை
* மேலும் கொரோனா நோய் தொற்று மற்றும் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்துகளை உடனுக்குடன் வழங்கி நோய் தொற்றில் இருந்து அனைவரும் விரைவில் குணமடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* கொரோனா காலத்தில் கட்டுமான பொருட்களின் தேவை மிகவும் குறைந்துள்ள நிலையில் தற்போது விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக குறைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story