சித்தாலபாக்கத்தில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த வாலிபருக்கு அடி-உதை
சென்னையை அடுத்த சித்தாலபாக்கத்தில் ராஜலட்சுமி (வயது 33) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். மர்மநபர்கள் 2 பேர், இவரது ஓட்டலில் இட்லி வாங்குவதுபோல் வந்தனர்.
ராஜலட்சுமியிடம் பேச்சு கொடுத்த அவர்கள், திடீரென அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்
மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றவர்களில் ஒருவரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரை பெரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர், வடபழனியை சேர்ந்த சிவா என்பதும், தப்பி ஓடிய அவரது கூட்டாளி பெயர் பழனி என்பதும் தெரிந்தது. ராஜலட்சுமியிடம் பறித்த தாலி சங்கிலியுடன் அவர் தப்பி ஓடிவிட்டார். பொதுமக்கள் தாக்கியதில் சிவாவின் வாயில் காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story