வேதாரண்யம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு காய்த்து தொங்கும் முந்திரி


வேதாரண்யம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு காய்த்து தொங்கும் முந்திரி
x
தினத்தந்தி 18 Jun 2021 3:48 PM IST (Updated: 18 Jun 2021 3:48 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு முந்திரி நன்கு காய்த்து தொங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இப்பகுதியில் 5 ஆயிரம் டன் முந்திரி காய்க்கும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலால் இப்பகுதியில் உள்ள முந்திரி மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் 2 ஆண்டுகளாக முந்திரி காய்க்காமல் இருந்தது. இதனால் முந்திரி விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் சேதமடைந்த முந்திரி மரங்களை விவசாயிகள் பராமரித்து வந்தனர். தற்போது மரங்கள் துளிர்விட்டு நன்கு வளர்ந்து பூப்பூத்து காய் காய்க்க தொடங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு முந்திரி நன்கு காய்த்து தொங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story