அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1¼ லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம்


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1¼ லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம்
x
தினத்தந்தி 18 Jun 2021 11:11 AM GMT (Updated: 18 Jun 2021 11:11 AM GMT)

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான இலவச பாடப்புத்தகங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டன.


தேனி:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. அதன்படி 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சடிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 530 அரசு பள்ளிகள், 236 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 766 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த பள்ளிகளில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 527 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
வினியோகம்
இந்த மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடப்புத்தகங்கள் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளன. அவை 3 கல்வி மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, பள்ளி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் மாணவ, மாணவிகளுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவ, மாணவிகளை வரவழைத்து அவர்களிடம் பாடப்புத்தகங்களை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Next Story