வல்லம்-திருச்சி புறவழிச்சாலை பாலத்தில் இருந்து லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது
வல்லம்-திருச்சி புறவழிச்சாலை பாலத்தில் இருந்து லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 100 அரிசி மூட்டைகள் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வல்லம்,
கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஆயிரம் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் வல்லம் புறவழிச்சாலை பாலத்தின் மீது தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்து சேதமடைந்தன.
மேலும் விபத்தில் காயமடைந்த லாரி டிரைவரை அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து நேற்று காலை லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் சாலைகளில் கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்றொரு லாரியில் வந்த தொழிலாளர்கள் சேதம் அடையாமல் இருந்த அரிசி மூட்டைகள் ஏற்றி சென்றனர். இதுகுறித்து வல்லம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story