தேனி மாவட்டத்தில் 129 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் நேற்று 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 129 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்து 486 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 215 பேர் நேற்று குணமாகினர். தற்போது இந்த வைரஸ் பாதிப்புடன் 1,403 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 67 பேர் செயற்கை ஆக்சிஜன் சுவாசம் உதவியுடனும், 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 472 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story