அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி
கோவை
கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து தடை செய் யப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே விரைவில் அரசு பஸ்கள் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே கோவையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் தொடங்கிவைத்தார். பொது மேலாளர் மகேந்திரகுமார் முன்னிலை வகித்தார். நேற்று ஒரே நாளில் 360 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story