குன்னூர் அருகே கான்கிரீட் சாலை உடைப்பு


குன்னூர் அருகே கான்கிரீட் சாலை உடைப்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 9:11 PM IST (Updated: 18 Jun 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே ஊராட்சி மூலம் போடப்பட்ட கான்கிரீட் சாலை ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாகக்கூறி ராணுவத்தினர் பெயர்த்து உடைத்துவிட்டனர்.

குன்னூர்,

குன்னூர் அருகே மேல்பாரத்நகர் உள்ளது. இங்கிருந்து பேரக்ஸ் பகுதிக்கு செல்ல பேரட்டி ஊராட்சி மூலம் கான்கிரீட் சாலை போடப்பட்டது. ஆனால் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாகக்கூறி சாலை அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் கான்கிரீட் சாலையை ராணுவத்தினர் பெயர்த்து உடைத்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் துணை கலெக்டர் கண்ணன், தாசில்தார் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். 

அப்போது சாலையை மீண்டும் அமைத்து பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக ராணுவத்தினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்தனர். 

எனினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அடுத்த 3 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் அறிவித்தனர்.


Next Story