சோளிங்கரில் ஊரடங்கை மீறிவியாபாரம் செய்த ஜவுளிக்கடைகளுக்கு அபராதம்
சோளிங்கரில் ஊரடங்கை மீறிவியாபாரம் செய்த ஜவுளிக்கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
சோளிங்கர்,
ஊரடங்கு உத்தரவை மீறி சோளிங்கர் பேரூராட்சிக்கு உட்பட்ட சித்தூர் சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடை, சுப்பாராவ் தெருவில் உள்ள மற்றொரு ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களை கடை உள்ளே அனுப்பி, கடையின் வெளிேய கதவுக்கு பூட்டுப்போட்டு பூட்டி விட்டு வியாபாரம் செய்வதாக தாசில்தார் வெற்றிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தாசில்தார் வெற்றிகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் யுவராஜ், கிராம நிர்வாக அலுவலர் சானு, கிராம உதவியாளர் சிவா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இரு ஜவுளிக்கடைகளுக்கு சென்றனர்.
அந்த இரு ஜவுளிக்கடைகளின் கதவின் பூட்டை திறந்து கடைகள் உள்ளே சோதனை செய்தனர். அதில் 25-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இருந்தது தெரிந்தது. இதையடுத்து இரு ஜவுளிக்கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.
ஜவுளிக்கடைகளின் உள்ளே சமூக விலகலை கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி ஜவுளிக்கடையை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story