உடுமலை பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

உடுமலை பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
x
தினத்தந்தி 18 Jun 2021 10:20 PM IST (Updated: 18 Jun 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

உடுமலை
உடுமலை பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4 வயது சிறுமி
உடுமலையை அடுத்த ஊராட்சி பகுதியில் ஒரு பெண் தனது 4 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கோவையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவர் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் உடுமலைக்கு வந்து செல்வார்.
அந்த பெண் அதே பகுதியில் குடியிருக்கும் சின்னச்சாமி என்பவரது வீட்டில், வீட்டு வேலை செய்து வந்தார். வேலைக்கு செல்லும் போது எல்.கே.ஜி. படிக்கும் தனது 4 வயது மகளையும் அந்த பெண் அழைத்து செல்வது வழக்கம்.
பாலியல் தொல்லை
இந்த நிலையில் அந்த பெண்ணின் 4 வயது மகளுக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பெண் தனது மகளிடம் விசாரித்தபோது, அந்த சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் குறித்து, அந்த சிறுமியின் தாயார் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
‘போக்சோ’ சட்டத்தில்  கைது
இதையொட்டி உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமியை (வயது 58) ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சின்னச்சாமி உடுமலையை அடுத்த எலையமுத்தூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக வேலை செய்து வருகிறார்.
கைது செய்யப்பட்ட சின்னசாமியை திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படு்த்தினர். அதனைத்தொடர்ந்து நீதிபதி, வருகிற 2-ந்தேதி வரை சின்னசாமியை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருப்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Next Story