சிவன்மலை முருகன் கோவிலில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்


சிவன்மலை முருகன் கோவிலில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 18 Jun 2021 10:25 PM IST (Updated: 18 Jun 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

சிவன்மலை முருகன் கோவிலில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

காங்கேயம்,
 காங்கேயம் எல்லைக்குட்பட்ட இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோவில், காடையூரில் உள்ள காடையீஸ்வரர் கோவில், பாப்பினி பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் ஆகிய இடங்களில் நேற்று காங்கேயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் செயல் அலுவலர்கள், பூசாரிகள், குருக்கள் ஆகியோர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி குறித்து செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் கோவில்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் வழிமுறைகளையும் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியன் விரிவாக விளக்கி கூறினார். மேலும் தீ அணைக்கும் வழிமுறைகள் பற்றி தீ அணைக்கும் கருவிகள் வைத்து அனைவருக்கும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Next Story