நெய் மிளகாய் சீசன் தொடங்கியது


நெய் மிளகாய் சீசன் தொடங்கியது
x
தினத்தந்தி 18 Jun 2021 10:47 PM IST (Updated: 18 Jun 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் நெய் மிளகாய் சீசன் தொடங்கியது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் மட்டுமின்றி காய்கறி சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பூண்டு, கேரட் பயிர்களுக்கு ஊடுபயிராக நெய் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு முறை நடவு செய்தால், தொடர்ந்து மகசூல் கொடுத்து வரும். நீலகிரி, ஏற்காடு, மூணாறு போன்ற மிதவெப்ப நிலை உள்ள இடங்களில் நெய் மிளகாய் நன்கு வளரும். இதன் சீசன் காலம், ஜூன் மாதம் ஆகும். 

இந்த நெய் மிளகாய் அதிக காரத்தன்மை கொண்டது ஆகும்.  தற்போது குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நெய்மிளகாய் சீசன் தொடங்கி உள்ளது. இந்த நெய் மிளகாய் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Next Story