டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி
டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருபவர் வினோபா நகரைச் சேர்ந்த பாண்டி (வயது 50). இவர் கடையை அடைத்துவிட்டு புள்ளிகுலம் - ஊரக்குடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் பாண்டியை வழிமறித்து அவரிம் இருந்த மொபைல், ரூ.5,500, பேங்க் பாஸ்புக், டாஸ்மாக் கடை சாவி ஆகியவற்றை பறித்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி தாலுகா இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடிவருகிறார்.
Related Tags :
Next Story