பர்கூர் அருகே எலக்ட்ரீசியன் கொலையில் 2 பெண்கள் கைது


பர்கூர் அருகே எலக்ட்ரீசியன் கொலையில் 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 10:49 PM IST (Updated: 18 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே எலக்ட்ரீசியன் கொலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பர்கூர்:
எலக்ட்ரீசியன் கொலை
பர்கூரை அடுத்த பண்டசீமானூர் பகுதியை சேர்ந்தவர் கவுரம்மா (வயது 65). இவரது மகன் சுகுமார் (35). எலக்ட்ரீசியன். கவுரம்மா நிலத்தில் சுகுமார் விவசாயம் செய்து வந்தார். அந்த நிலத்தை தன் தம்பிகளுக்கு வழங்கும்படி கவுரம்மா கூறி வந்தார். மேலும், மகனிடம் கோபித்து கொண்டு தன் தம்பிகள் வீட்டில் தங்கியிருந்தார். 
இந்த நிலத்தகராறில், கடந்த, 16-ந் தேதி சுகுமார் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து பர்கூர் இன்ஸ்பெக்டர் முரளி விசாரித்து, சுகுமாரை கொலை செய்த தாய் கவுரம்மா (65), தாய்மாமன்கள் சுப்பிரமணி (55), திம்மராயன் (45) மற்றும் உறவினர்கள் ராமன் (38), லட்சுமணன் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
2 பெண்கள் கைது
மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சுப்பிரமணியின் மனைவி கஸ்தூரி (45), திம்மராயன் மனைவி கல்பனா (33) ஆகிய 2 பேரை இன்ஸ்பெக்டர் முரளி கைது செய்தார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story