பல்லடத்தில் அதிவேகமாக வந்த தனியார் பனியன் நிறுவன வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் முன்பு பாய்ந்தது


பல்லடத்தில் அதிவேகமாக வந்த தனியார் பனியன் நிறுவன வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் முன்பு பாய்ந்தது
x
தினத்தந்தி 18 Jun 2021 10:55 PM IST (Updated: 18 Jun 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் அதிவேகமாக வந்த தனியார் பனியன் நிறுவன வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் முன்பு பாய்ந்தது

பல்லடம்,
பல்லடத்தில் அதிவேகமாக வந்த தனியார் பனியன் நிறுவன வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் முன்பு பாய்ந்தது. அப்போது தாய், அவரது 2 மகள்கள் வீட்டிற்குள் இருந்ததால் காயமின்றி தப்பினர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வீட்டின் முன்பு பாய்ந்தது
பல்லடம் வடுகபாளையம் பகுதியில் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நேற்று காலை சுமார் 6 மணி அளவில் வெங்கிட்டாபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பனியன் நிறுவன வேன் வந்தது.  வடுகபாளையம் நால்ரோடு பகுதி அருகே வந்த போது அதற்கு முன்னே சென்ற வாகனம் திடீரென திரும்பியதால் வேனை திடீரென நிறுத்த முடியவில்லை. இதனால், வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த ராமசாமி என்பவரது வீட்டின் மீது பாய்ந்தது. இதில் அங்கிருந்த செல்போன் கடை பந்தல், வீட்டின் பந்தல், வாசல்படிகள் ஆகியவற்றை உடைத்துக் கொண்டு வீட்டின் வாசலில் ஏறி நின்றது.
தாய், 2 மகள்கள் தப்பினர்
இதில் ராமசாமி வீட்டிற்குள் இருந்த சத்யா மற்றும் அவரது 2 மகள்களும் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதாலும், காலை நேரம் என்பதாலும், ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்து பல்லடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரத்தில் இயங்கிவரும் தனியார் பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் என்பதும், இதனை திருப்பூர் கோவில்வழி பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன்(வயது23) என்பவர் ஓட்டி வந்ததும், அவருடன் அதே பகுதியைச்சேர்ந்த வரதராஜன்(30) உடன் வந்ததும் தெரியவந்தது. 
இந்த விபத்தில் காயமடைந்த முத்துக்கருப்பன் மற்றும் வரதராஜன் இருவரும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story