கடலில் மூழ்கி வாலிபர் சாவு


கடலில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 18 Jun 2021 10:57 PM IST (Updated: 18 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே கடலில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் அகிலன். இவருடைய மகன் நித்திஷ் (வயது 17). இவர் கடந்த 16-ந் தேதி பகலில் ஆலந்தலை கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் நீரில் மூழ்கினார். உடனே அங்கிருந்தவர்கள் கடலில் இறங்கி நித்திசை தேடினர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. 

இந்த நிலையில் நேற்று காலை ஆலந்தலை தூண்டில் வளைவு பாலம் கட்டும் பகுதியில் நித்திஷ் உடல் ஒதுங்கியது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கூடங்குளம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story