விளைநிலங்களில் மின்வேலி அமைத்து உயிரிழப்பு ஏற்பட்டால் 7 ஆண்டு சிறை
விளை நிலங்களில் மின்வேலி அமைத்து உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை இருப்பதாக திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாராமன் எச்சரித்துள்ளார்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டத்துக்கு புறம்பானது
திருக்கோவிலூர் கோட்ட மின்வாரிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு விவசாய பணிகளுக்காக மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் சிலர் மின்சாரத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தி மின்வேலி அமைக்கின்றனர். இதனால் சமீபத்தில் மணலூர்பேட்டை பகுதியில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது. விவசாய நிலங்களுக்கு விவசாய பணிகளுக்காக மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதை தவறாக பயன்படுத்தி மின் வேலி அமைத்ததன் மூலம் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மின் இணைப்பு துண்டிப்பு
எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறான செயல்களில் விவசாயிகள் யாரேனும் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும் மின் இணைப்பும் துண்டிக்கப்படும். அரசு எந்த நோக்கத்துக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளதோ அதற்காக மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story