வைக்கோல் படப்பு எரிந்து நாசம்
விளாத்திகுளத்தில் மின்சார ஒயர் உரசியதில் வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் 15-வது வார்டு கேசவன் நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது நிலத்தில் மாட்டுத்தீவன வைக்கோல் வைத்திருந்தார். அதன் அருகே மின்சார ஒயர் செல்கிறது. நேற்று முன்தினம் விளாத்திகுளம் பகுதியில் காற்று பலமாக வீசியதில், மின்சார ஒயர் உரசியதில் ைவக்ேகால் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது.. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குமரேசனுக்கு நிதி உதவி வழங்கினார்.
Related Tags :
Next Story