தூத்துக்குடி மாவட்டத்துக்கு 5 லட்சம் பாடப்புத்தகங்கள் வந்தது


தூத்துக்குடி மாவட்டத்துக்கு 5 லட்சம் பாடப்புத்தகங்கள் வந்தது
x
தினத்தந்தி 18 Jun 2021 11:26 PM IST (Updated: 18 Jun 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் பாடப்புத்தகங்கள் வந்து உள்ளன.

தூத்துக்குடி:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கையும் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் அரசு இலவச புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 5 லட்சம் புத்தகங்கள் வந்து உள்ளன. இந்த புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. 

நேற்று முதல் புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. வேன்கள் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களுக்கும் புத்தகங்கள் கொண்டு செல்லப்பட்டன. திங்கட்கிழமை முதல் புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story