பொள்ளாச்சி பகுதியில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு வாலிபர் பலி


பொள்ளாச்சி பகுதியில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு வாலிபர் பலி
x
தினத்தந்தி 18 Jun 2021 6:07 PM GMT (Updated: 18 Jun 2021 6:07 PM GMT)

பொள்ளாச்சி பகுதியில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதுடன், வாலிபர் பலியானார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது டன், வாலிபர் பலியானார். 

60 பேருக்கு கொரோனா 

பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி நகர், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் தலா 4 பேர், வடக்கு மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தலா 12 பேர், தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில் தலா 14 பேர் என மொத்தம் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

வால்பாறையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியை சேர்ந்த 33 வயது வாலிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் பொள்ளாச்சி பகுதியில் கொரோனா 2-வது அலைக்கு பலியானவர் களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது. 

காய்ச்சல் பரிசோதனை முகாம் 

இதுவரை 10,131 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஏராளமா னோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். வீடுகளில் 318 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் தொற்று அதிகம் பாதித்த 23 வீதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் தொற்று அதிகம் பாதித்த 20 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. 

இதில் 1,012 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் 512 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story