அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகள் பறிமுதல்
பொள்ளாச்சி அருகே விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அனுமதி இல்லாமல் இயக்கியதற்காக ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அனுமதி இல்லாமல் இயக்கியதற்காக ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் சிறைபிடிப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடிவலசு வழியாக கல்குவாரி களில் இருந்து கற்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் சென்று வருகின்றன.
இந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி செல்வதால் சாலைகள் பழுதடைந்து சேதமடைவதாக கூறி பொதுமக்கள் அந்த வழியாக வந்த 5 லாரிகளை சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 லாரிகள் பறிமுதல்
இதை தொடர்ந்து லாரிகளை போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கேரளாவில் அனுமதி பெற்று விட்டு, தமிழகத்திற்குள் அனுமதி இல்லாமல் லாரிகளை இயக்கியது தெரியவந்தது.
மேலும் வரி செலுத்தாமலும், விதிமுறையை மீறி அதிக பாரம் ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 5 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.3½ லட்சம் அபராதம்
மேலும் வரி செலுத்தாமல் லாரிகளை இயக்கியதற்கு ரூ.27 ஆயிரத்து 300 சேர்த்து மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோன்று விதிமுறைகளை மீறி இயக்கப்படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story