சுல்தான்பேட்டை கிணத்துக்கடவில் 361 பேருக்கு கொரோனா பரிசோதனை
சுல்தான்பேட்டை கிணத்துக்கடவில் 361 பேருக்கு கொரோனா பரிசோதனை
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை பகுதியில் வட்டார ஆணையாளர் சிவகாமி, மருத்துவ அதிகாரி வனிதா ஆகியோர் மேற்பார்வையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நடமாடும் மருத்துவக் குழுவினர் கிராமங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
ஜல்லிப்பட்டி உள்பட 3 கிராமங்களில் பரிசோதனை நடந்தது. இதில் டாக்டர் பவித்ரா, கிராம சுகாதார செவிலியர்கள் கவுரி, ஹேமமாலினி, ஆய்வக நுட்புனர்கள் பிரியா, வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச் சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பங்கேற்று 160 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அதுபோன்று கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா உத்தரவின்பேரில் மருத்துவக்குழுவினர் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதி, சென்னியூர் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தினார்கள்.
இந்த முகாமில் டாக்டர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டு 201 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story