சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு


சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
x
தினத்தந்தி 18 Jun 2021 11:52 PM IST (Updated: 18 Jun 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. அத்துடன் ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது.

வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. அத்துடன் ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. 

கனமழை கொட்டியது 

மலைப்பிரதேசமான வால்பாறையில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். 

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையுடன் சேர்ந்து புயலும் வீசியதால் கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக  மேல் நீரார் பகுதியில் 10 செ.மீ. மழை பதிவானது. 

இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் நீரோடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

 இதனால் பி.ஏ.பி. திட்டத்துக்கு அடிப்படை அணைகளாக இருக்கும் சோலையார், சின்னக்கல்லார், நீரார் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

90 அடியாக உயர்வு 

தொடர்ந்து சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. 

160 அடி உயரம் கொண்ட இந்த அணை, ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 90 அடியை தாண்டி உள்ளது. 

தற்போது அணைக்கு வினாடிக்கு 4,248 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 418 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

வால்பாறை பகுதியில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் லேசாக வெயில் அடித்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் பெய்த மழையளவு (மி.மீட்டர்) விவரம் வருமாறு:-

வால்பாறை 34 மி.மீ., சோலையார் அணை 44 மி.மீ., பரம்பிக்குளம் 24, மேல் நீராறு 59, கீழ் நீராறு 61 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. 

தொடர்ந்து சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், விரைவில் 100 அடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story